குருவிரொட்டி இணைய இதழ்

ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் – குறள்: 967


ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
– குறள்: 967

– அதிகாரம்: மானம், பால்: பொருள்.



கலைஞர் உரை

தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச்
செத்தொழிவது எவ்வளவோ மேல்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் தன்னை யிகழ்வார் பின் சென்று அவர் தரும் பொருள் பெற்று அதனால் உயிர் வாழ்தலினும் ; தான் பொருளற்ற அப்பொழுதே உயிர் துறந்தான் அல்லது இறந்தான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நன்றாகும்



மு. வரதராசனார் உரை

மதியாதவரின் பின்சென்று ஒருவன் உயிர் வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.



G.U. Pope’s Translation

Better ’twere said, ‘He perished!’ than to gain
The means to live, following in foeman’s train.

Thirukkural: 967, Honour, Wealth.