குருவிரொட்டி இணைய இதழ்

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே – குறள்: 155


ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.

– குறள்: 155

– அதிகாரம்:பொறை உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை
உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக்
கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பிறன் செய்த தீங்கைப் பொறாது அவனைத் தண்டித்தாரை அறிவுடையோர் ஒரு பொருட்டாகக் கொள்ளார்; ஆனால் அத்தீங்கைப் பொறுத்தாரையோ பொன்போற் போற்றி வைத்துக் கொள்வர்.



மு. வரதராசனார் உரை

(தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால் பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.



G.U. Pope’s Translation

Who wreak their wrath as worthless are despised; Who patiently forbear as gold are prized.

 – Thirukkural: 155, The Possession of Patience, Forbearance, Virtues