குருவிரொட்டி இணைய இதழ்

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை – குறள்: 835


ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு.
– குறள்: 835

– அதிகாரம்: பேதைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக் காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பேதையானவன்; எழுபிறப்பளவும் தான் அழுந்திக்கிடந்து வருந்தும் நரகத்துன்பத்தை;இவ்வொருபிறப்புள்ளேயே தேடிக்கொள்ள வல்லவனாம்.



மு. வரதராசனார் உரை

எழுபிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதை தன் ஒரு பிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.



G.U. Pope’s Translation

The fool will merit hell in one brief life on earth, In which he entering sinks through sevenfold round of birth.

Thirukkural: 835, Folly, Wealth