குருவிரொட்டி இணைய இதழ்

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து – குறள்: 541


ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
– குறள்: 541

– அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன் குடிகள் செய்த குற்றங்களை ஆராய்ந்து ; எவரிடத்தும் சிறப்பாக அன்பு கொள்ளாது ; நடுநிலை பொருந்தி ; அக்குற்றங்கட்கேற்ற தண்டனைகளை அறநூலறிஞரொடு நூலுத்தி பட்டறிவொடு பொருந்தத் தீர்மானித்து ; அவற்றை நிறைவேற்றுவதே செங்கோல் முறையாம்.



மு. வரதராசனார் உரை

யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமை பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.



G.U. Pope’s Translation

Search out, to no one favour show, with heart that justice loves
Consult,then act; this is the rule that right approves.

 – Thirukkural: 541, The Right Sceptre, Wealth