குருவிரொட்டி இணைய இதழ்

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் – குறள்: 128


ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்று ஆகாது ஆகிவிடும்.
– குறள்: 128

– அதிகாரம்: அடக்கம் உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல்
தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் கூறும் தீய சொற்களின் பொருளால் விளையும் துன்பம் ஒன்றேனும் பிறர்க்கு உண்டாயின் ; அவன் ஏற்கெனவே செய்துள்ள பிறவறங்கள் பயன்படாமற்போம் .



மு. வரதராசனார் உரை

தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.



G.U. Pope’s Translation

Though some small gain of good it seem to bring,
The evil word is parent still of evil thing.

 – Thirukkural: 128, The Possession of Self-restraint, Virtues