குருவிரொட்டி இணைய இதழ்

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து – குறள்: 476


நுனிக்கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி ஆகி விடும்.
குறள்: 476

அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

தன்னைப் பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒரு மரத்தின் உச்சிக்கிளையில் ஏறிநின்றவர் தம் ஊக்கத்தினால் அதன் மேலும் ஏற முயல்வாராயின் ; அம்முயற்சியால் அவர் உயிர்க்கு முடிவு நேர்ந்து விடும் .



மு. வரதராசனார் உரை

ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலும் ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்



G.U. Pope’s Translation

Who daring climbs, and would himself upraise
Beyond the branch’s tip, with life the forfeit pays.

 – Thirukkural: 476,The Knowledge of Power, Wealth