குருவிரொட்டி இணைய இதழ்

நீர்இன்று அமையாது உலகு – குறள்: 20


நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
– குறள்: 20

– அதிகாரம்: வான்சிறப்பு, பால்: அறம்



கலைஞர் உரை

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர்

எத்துணை உயர்ந்தவர்க்கும் நீரின்று உலக வாழ்வு நடவாதாயின், அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் மழையின்றி நிகழாது.



மு.வரதராசனார் உரை

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.



G.U. Pope’s Translation

When water fails, functions of nature cease, you say;
Thus when rain fails, no men can walk in ‘duty’s ordered way’.

– Thirukkural: 20, The Excellence of Rain, Virtues