குருவிரொட்டி இணைய இதழ்

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே – குறள்: 679


நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
– குறள்: 679

– அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வினைதொடங்குமுன் தன் பகைவரொடு பொருந்தாதவரைத் தனக்கு நட்பாக்கிக்கொள்ளுதல்; தன் நண்பருக்கு இனியன செய்தலினும் விரைந்து செய்யப்பட வேண்டியதே.



மு. வரதராசனார் உரை

பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றைச் செய்தலை விட விரைந்து செய்யத்தக்கதாகும்.



G.U. Pope’s Translation

Than kindly acts to friends more urgent thing to do, Is making foes to cling as friends attached to you.

 – Thirukkural: 679, The Method of Acting, Wealth