குருவிரொட்டி இணைய இதழ்

நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் – குறள்: 1046


நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல்பொருள் சோர்வு படும். – குறள்: 1046

– அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள்



கலைஞர் உரை

அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சிறந்த நூற்பொருளைத் தெளிவாக அறிந்து விளக்கமாகவும் இனிதாகவும் எடுத்துச் சொன்னராயினும்; வறியவர் சொல்லுஞ் சொல் தன் பொருட் சிறப்பை இழந்துவிடும்.



மு. வரதராசனார் உரை

நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்ன போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.



G.U. Pope’s Translation

Though deepest sense, well understood, the poor man’s words convey, Their sense from memory of mankind will fade away.

 – Thirukkural: 1046, Poverty, Wealth