குருவிரொட்டி இணைய இதழ்

முன்னுறக் காவாது இழுக்கியான் – குறள்: 535


முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்ஊறு இரங்கி விடும்.
– குறள்: 535

– அதிகாரம்: பொச்சாவாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன்,
துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன்னால் தடுக்கப்படவேண்டிய துன்பங்களை அவை வருமுன்பே யறிந்து தன்னைக்காவாது மறந்திருந்தவன் ; பின்பு அவை நேர்ந்த பொழுது தடுக்க லாகாமையின் தன்தவற்றையெண்ணி வருந்தியழிவான்.



மு. வரதராசனார் உரை

வரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைந்து இரங்குவான்.



G.U. Pope’s Translation

To him who nought foresees, recks not of anything, The after woe shall sure repentance bring.

 – Thirukkural: 535, Unforgetfulness, Wealth