குருவிரொட்டி இணைய இதழ்

மருந்துஆகித் தப்பா மரத்தற்றால் – குறள்: 217


மருந்துஆகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். – குறள்: 217

– அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம்



கலைஞர் உரை

பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம்,
செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும்
மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

செல்வம் ஒப்புரவு செய்யும் பெருந்தகையாளனிடம் சேரின், அது வேர்முதல் கொழுந்துவரை எல்லாவுறுப்பும் பல்வேறு நோய்க்கு மருந்தாகித் தப்பாது பயனபடும் மரத்தையொக்கும்.



மு. வரதராசனார் உரை

ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடம் செல்வம் சேர்ந்தால், அஃது எல்லா உறுப்புக்களும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.



G.U. Pope’s Translation

Unfailing tree that healing balm distils from every part, Is ample wealth that falls to him to large and noble heart.

 – Thirukkural: 217, The Knowledge of What is Befitting a Man’s Position, Virtues