குருவிரொட்டி இணைய இதழ்

மனத்தது மாசுஆக மாண்டார்நீர் – குறள்: 278


மனத்தது மாசுஆக மாண்டார்நீர் ஆடி
மறைந்துஒழுகும் மாந்தர் பலர்.

– குறள்: 278

– அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம்



கலைஞர் உரை

நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல,
மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம் மனத்தின்கண் குற்றமிருக்கவும் ; தவத்தால் மாட்சிமைப் பட்டவர் போற் பலகால் குளிர்ந்த நீரில் மூழ்கி ; அதன்கண்ணே மறைந்தொழுகும் மாந்தர் உலகத்துப்பலர்.



மு. வரதராசனார் உரை

மனத்தில் மாசு இருக்கத் தவத்தால் மாண்பு பெற்றவரைப் போல நீரில் மூழ்கி மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.



G.U. Pope’s Translation

Many wash in hallowed waters, living lives of hidden shame; Foul in heart, yet high upraised of men in virtuous fame.

 – Thirukkural: 278, Inconsistent Conduct, Virtues