குருவிரொட்டி இணைய இதழ்

குன்றுஅன்னார் குன்ற மதிப்பின்- குறள்: 898


குன்றுஅன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
குறள்: 898

– அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மலை போலும் மாதவர்; இந்நில வுலகத்தில் அழிவின்றி நிலைபெற்றவர் போல் தோன்றும் பெருஞ்செல்வப் பேரரசர் கெடக்கருதுவராயின்; அவர் தம் இனத்தொடும் அழிந்து போவர்.



மு. வரதராசனார் உரை

மலைபோன்ற பெரியார் கெட நினைத்தால், உலகில் அழியாமல் நிலைபெற்றாற்போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.



G.U. Pope’s Translation

Though every royal gift, and stores of wealth your life should crown,
What are they, if the worthy men of mighty virtue frown?

.

Thirukkural: 898, Not Offending the Great, Wealth.