குருவிரொட்டி இணைய இதழ்

குடிப்பிறந்து தன்கண் பழி நாணுவானை – குறள்: 794


குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
– குறள்: 794

– அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால்



கலைஞர் உரை

பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும்
பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது
பெற்றிருப்பது பெரும் சிறப்புக் குரியதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உயர் குடியிற் பிறந்து தன்னைப்பற்றி உலகங்கூறும் பழிக்கு அஞ்சுபவனை; அவன் விரும்பிய பொருளைக் கொடுத்தாயினும் நண்பனாகக் கொள்ளுதல் வேண்டும்.



மு. வரதராசனார் உரை

உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்,.



G.U. Pope’s Translation

Who,born of noble race, from guilt would shrink with shame,
Pay any price, so you as friend that man may claim.

 – Thirukkural: 794, Investigation formatting Friendships, Wealth