குருவிரொட்டி இணைய இதழ்

குடிஎன்னும் குன்றா விளக்கம் – குறள்: 601


குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும்
மாசுஊர மாய்ந்து கெடும்.
– குறள்: 601

– அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தான் பிறந்த குடியாகிய நந்தா விளக்கு ; சோம்பல் என்னும் தூசி அடைவதால் ஒளிமழுங்கிக் கெடும்.



மு. வரதராசனார் உரை

ஒருவனுக்குத் தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படியப் படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.



G.U. Pope’s Translation

Of household dignity the lustre beaming bright, Flickers and dies when sluggish foulness dims its light.

 – Thirukkural: 601, Unsluggishness, Wealth