குருவிரொட்டி இணைய இதழ்

கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் – குறள்: 554

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடி
சூழாது செய்யும் அரசு.
– குறள்: 554

– அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு நிதி
ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன்குடி கட்கு நன்மையையும் தன்தவற்றால் மேல் விளைவதையும் எண்ணாது கொடுங்கோலாட்சி செய்யும் அரசன் ; தன் செல்வத்தையும் குடிகளையும் ஒருசேர இழப்பான்.



மு. வரதராசனார் உரை

( ஆட்சிமுறை கெட்டுக் ) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.



G.U. Pope’s Translation

Whose rod from right deflects, who counsel doth refuse, At once his wealth and people utterly shall lose.

 – Thirukkural: 554, The Cruel Sceptre, Wealth



FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link