குருவிரொட்டி இணைய இதழ்

கற்றாருள் கற்றார் எனப்படுவர் – குறள்: 722


கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்
. – குறள்: 722

– அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தாம் கற்றவற்றைக் கற்றாரவைக்கண் அவர் உளங் கொள்ளும்வகை சொல்லவல்லவர்; கற்ற ரெல்லாருள்ளும் நன்கு கற்றவரென்று கற்றாரால் உயர்த்துச் சொல்லப்படுவர்;



மு. வரதராசனார் உரை

கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.



G.U. Pope’s Translation

Who what they’ve learned, in penetrating words have learned to say,
Before the learn’d among the learn’d most learn’d are they.

 – Thirukkural: 722, Not to dread the Council, Wealth