குருவிரொட்டி இணைய இதழ்

கனவினும் இன்னாது மன்னோ – குறள்: 819

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
– குறள்: 819

– அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள்



கலைஞர் உரை

சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு, கனவிலே கூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சொல்லொன்றுஞ் செயலொன்றுமா யிருப்பவரின் நட்பு நனவில் மட்டுமன்றிக் கனவில் நினைப்பினும் துன்பந்தருவதாம்.



மு. வரதராசனார் உரை

செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும்.



G.U. Pope’s Translation

E’en in a dream the intercourse is bitterness
With men whose deeds are other than their words profess.

.

Thirukkural: 819, Evil Friendship, Wealth

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link