குருவிரொட்டி இணைய இதழ்

காணாச் சினத்தான் கழிபெரும் – குறள்: 866


காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
குறள்: 866

– அதிகாரம்: பகை மாட்சி, பால்: பொருள்.



கலைஞர் உரை

சிந்திக்காமலே சினம் கொள்பவனாகவும், பேராசைக்காரனாகவும்
இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

செய்திகளின் உண்மையையும் பிறர் அருமை பெருமைகளையும் பாராமைக் கேதுவான கடுஞ் சினத்தனாகவும்; கரை கடந்த பெண்ணாசையனாகவும் இருப்பவனது; பகைமை விரும்பிக் கொள்ளப்படும்.



மு. வரதராசனார் உரை

ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால், அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.



G.U. Pope’s Translation

Blind in his rage, his lustful passions rage and swell; If such a man mislikes you, like it well.

Thirukkural: 866, The might of Hatred, Wealth.