குருவிரொட்டி இணைய இதழ்

இருமனப் பெண்டிரும் கள்ளும் – குறள்: 920


இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
குறள்: 920

– அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள்.



கலைஞர் உரை

இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும்,
சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இரு வேறுபட்ட மனத்தையுடைய விலைமகளிரும் கள்ளும் சூதும்; திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாம்.



மு. வரதராசனார் உரை

இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரும் கள்ளும் சூதுமாகிய இம் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.



G.U. Pope’s Translation

Women of double minds, strong drink, and dice to these giv’n o’er,
Are those on whom the light of Fortune shines no more.

Thirukkural: 920, Wanton Women, Wealth.