குருவிரொட்டி இணைய இதழ்

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் – குறள்: 1058


இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று. – குறள்: 1058

– அதிகாரம்: இரவு, பால்: பொருள்



கலைஞர் உரை

வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள் தம்மை நெருங்கக் கூடாது, என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும், வேறுபாடே இல்லை



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வறுமையுற்றுங் களைகண் இன்றியும் இரப்பவர் இல்லாவிடின்; குளிர்ந்த இடத்தையுடைய பெரிய மாநிலத்துள்ளார் செலவு வரவுகள்; மரத்தினாற் செய்யப்பட்ட உயிரில்லாத பாவை தன்னை இயக்கும் பொறிக்கயிற்றாற் சென்று வந்தாற் போலும்.



மு. வரதராசனார் உரை

இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.



G.U. Pope’s Translation

If askers cease, the mighty earth, where cooling fountains flow, Will be a stage where wooden puppets come and go.

 – Thirukkural: 1058, Mendicancy, Wealth