குருவிரொட்டி இணைய இதழ்

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் – குறள்: 1062


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான். – குறள்: 1062

– அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள்



கலைஞர் உரை

பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால்இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இவ்வுலகத்தைப் படைத்த இறைவன் இதில் வாழ்வார்க்கு உழைத்துயிர் வாழ்தலேயன்றி இரந்துயிர்வாழ்தலையும் விரும்பி வகுத்தானாயின்; அக்கொடியோனும் அவரைப்போன்றே நிலையில்லாது எங்கும் அலைந்துதிரிந்து கெடுவானாக.



மு. வரதராசனார் உரை

உலகத்தைப் படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக!



G.U. Pope’s Translation

If he that shaped the world desires that men should begging go, Through life’s long course. let him a wanderer be and perish so.

 – Thirukkural: 1062, The Dread of Mendicancy, Wealth