குருவிரொட்டி இணைய இதழ்

இன்மை ஒருவற்கு இளிவுஅன்று – குறள்: 988


இன்மை ஒருவற்கு இளிவுஅன்று சால்புஎன்னும்
திண்மை உண்டாகப் பெறின்.
– குறள்: 988

– அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை
என்பது இழிவு தரக் கூடியதல்ல.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

சான்றாண்மை யென்று சொல்லப்படும் உரம் வாய்ந்திருப்பின் ; ஒருவனுக்கு வறுமை இழிவாகாது.



மு. வரதராசனார் உரை

சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.



G.U. Pope’s Translation

To soul with Perfect virtue’s strength endued, Brings no disgrace the lack of every earthly good.

 – Thirukkural: 988, Perfectness, Wealth