குருவிரொட்டி இணைய இதழ்

இன்பத்துள் இன்பம் விழையாதான் – குறள்: 629


இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
– குறள்: 629

– அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம்
வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இயற்கை யாகவோ தன் முயற்சியாலோ தனக்கு இன்பம் வந்த விடத்து அதை நுகர்ந்தும் உள்ளத்தால் இன்புறாதவன்; அவ்விரு வழியிலும் தனக்குத் துன்பம் வந்த விடத்து அதை நுகர்ந்தும் மனத்தால் துன்பமுறுவதில்லை.



மு. வரதராசனார் உரை

இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவதும் இல்லை.



G.U. Pope’s Translation

Mid joys he yields hot heart to joys’ control,
Mid sorrows, sorrow cannot touch his soul.

 – Thirukkural: 629, Hopefulness in Trouble, Wealth