குருவிரொட்டி இணைய இதழ்

இன்பத்துள் இன்பம் பயக்கும் – குறள்: 854


இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். – குறள்: 854

– அதிகாரம்: இகல், பால்: பொருள்



கலைஞர் உரை

துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மாறுபாடு என்று சொல்லப்படும் தலையாய துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; அவ்வில்லாமை அவனுக்குத் தலையாய இன்பத்தை விளைக்கும்.



மு. வரதராசனார் உரை

இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது ஒருவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும்.



G.U. Pope’s Translation

Joy of joys abundant grows,
When malice dies, that woe of woes.

Thirukkural: 854, Hostility, Wealth