குருவிரொட்டி இணைய இதழ்

இன்பம் இடையறாது ஈண்டும் – குறள்: 369


இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
– குறள்: 369

– அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம்



கலைஞர் உரை

பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அவா என்று சொல்லப்படும் கடுந்துன்பம் ஒருவர்க்குக் கெடுமாயின், அவர் வீடு பெற்ற பின்பு மட்டுமன்றி அதற்கு முன்பு இங்கு உடம்போடு நின்ற விடத்தும் இன்பம் இடைவிடாது தொடரும்.



மு. வரதராசனார் உரை

அவா என்றுசொல்லப் படுகின்ற துன்பங்களுள் பொல்லாத துன்பம் கெடுமானால் இவ்வுலகிலும் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.



G.U. Pope’s Translation

When dies away desire, that woe of woes
Ev’n here the soul unceasing rapture knows.

Thirukkural: 369, The Extirpation of Desire, Virtues