குருவிரொட்டி இணைய இதழ்

இடுக்கண் படினும் இளிவந்த – குறள்: 654


இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்குஅற்ற காட்சி யவர்.
– குறள்: 654

– அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து
விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அசைவில்லாத தெளிந்த அறிவினையுடையார்; தாம் துன்பத்துள் அகப்பட்டாலும் அத்துன்பந் தீர்தற் பொருட்டுத் தமக்கு இழிவு தரும் வினைகளைச் செய்யமாட்டார்.



மு. வரதராசனார் உரை

அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்காகவும்) இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.



G.U. Pope’s Translation

Though troubles press, no shameful deed they do. Whose eyes the ever-during vision view.

 – Thirukkural: 654, Purity in Action, Wealth