குருவிரொட்டி இணைய இதழ்

எட்பகவு அன்ன சிறுமைத்தே – குறள்: 889


எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதுஆம் கேடு.
குறள்: 889

– அதிகாரம்: உட்பகை, பால்: பொருள்.



கலைஞர் உரை

எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால்
பெருங்கேடு விளையும்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உட்பகை சிறிய கூலப் பொருளான எள்ளின் பகுதிபோன்ற சிற்றளவினதேயாயினும்; வலிமை மிக்க தனிப்பட்டவனையும் குடும்பம் அல்லது அரசையும் அழிக்க வல்லதாம்.



மு. வரதராசனார் உரை

எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.



G.U. Pope’s Translation

Though slight as shred of ‘sesame’ seed it be,
Destruction lurks in hidden enmity.

Thirukkural: 889, Enmity Within, Wealth.