குருவிரொட்டி இணைய இதழ்

ஏந்திய கொள்கையார் சீறின் – குறள்: 899


ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
குறள்: 899

– அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால்,
அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உயர்ந்த நோன்புகளைக் கடைப்பிடித்த அருந்தவர் சீற்றங்கொள்ளின்; தேவருலக அரசனும் இடையே தன் பதவியிழந்து கெடுவான்.



மு. வரதராசனார் உரை

உயர்ந்த கொள்கையுடைய பெரியார் சீறினால், நாட்டை ஆளும் அரசனும் இடைநடுவே முரிந்து அரசு இழந்து கெடுவான்.



G.U. Pope’s Translation

When blazes forth the wrath of men of lofty fame, Kings even fall from high estate and perish in the flame.

Thirukkural: 899, Not Offending the Great, Wealth.