குருவிரொட்டி இணைய இதழ்

என்றும் ஒருவுதல் வேண்டும் – குறள்: 652


என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
– குறள்: 652

– அதிகாரம்: வினைத்தூய்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த
நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம் அரசனுக்கும் தமக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் பொதுவாக உரிய அறமும் மறுமைக்குச் சிறப்பாகவுரிய புகழும் விளைக்காத வினைகளை; எக்காலத்தும் அமைச்சர் செய்யாது விட்டு விடுதல் வேண்டும்.



மு. வரதராசனார் உரை

புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.



G.U. Pope’s Translation

From action evermore thyself restrain
Of glory and of good that yields no gain.

 – Thirukkural: 652, Purity in Action, Wealth