குருவிரொட்டி இணைய இதழ்

எனைவகையான் தேறியக் கண்ணும் – குறள்: 514


எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர். – குறள்: 514

– அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள்



கலைஞர் உரை

எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

எத்தனை வகையால் ஆராய்ந்து தெளிந்து வினைக்கு அமர்த்திய பின்பும் ; அவ்வினையின் தன்மையால் தன்மை வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலராவர்.



மு. வரதராசனார் உரை

எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும் (செயலை மேற்கொண்டு செய்யும்போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் உண்டு.



G.U. Pope’s Translation

Even when tests of every kind are multiplied, Full many a man proves otherwise, aby action tried!

 – Thirukkural: 514, Selection and Employment, Wealth