குருவிரொட்டி இணைய இதழ்

எய்தற்கு அரியது இயைந்தக்கால் – குறள்: 489


எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்.
– குறள்: 489

அதிகாரம்: காலமறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும்போது அதைப்
பயன்படுத்திக்கொண்டு அப்போதே செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்க வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பகைவரை வெல்லக் கருதும் அரசன் தனக்கு வாய்த்தற்கரிய சமையம் வந்து சேரின் ; அப்போதே ; அது வரை செய்தற்கு அரிதாயிருந்த வினைகளைச் செய்துவிடுக .



மு. வரதராசனார் உரை

கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச் செய்யவேண்டும்.



G.U. Pope’s Translation

When hardest gain of opportunity at last is won,
With promptitude let hardest deed be done.

 – Thirukkural: 489, Knowing the fitting time, Wealth