குருவிரொட்டி இணைய இதழ்

அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று – குறள்: 135


அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
– குறள்: 135

– அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பொறாமையுள்ளவனிடத்திற் செல்வமில்லாதது போல , ஒழுக்கமில்லாதவனிடத்து உயர்வு இல்லை . உயர்வு உயர்குலத்தானாதல் .



மு. வரதராசனார் உரை

பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.



G.U. Pope’s Translation

The envious soul in life no rich increase of blessings gains, So man of ‘due decorum’ void no dignity obtains.

 – Thirukkural: 135, The Possession of Decorum, Virtues