குருவிரொட்டி இணைய இதழ்

அற்றம் மறைத்தலோ புல்லறிவு – குறள்: 846


அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
குறள்: 846

– அதிகாரம்: புல்லறிவாண்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

தமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

புல்லறிவாளர் தம்மிடத்துள்ள குற்றங்களை நீக்காவிடத்து, தம் மரும வுறுப்புக்களை மட்டும் ஆடையால் மறைத்துக்கொள்ளுதல் சிற்றறிவாம்.



மு. வரதராசனார் உரை

தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.



G.U. Pope‘s Translation

Fools are they who their nakedness conceal,
And yet their faults unveiled reveal.

 – Thirukkural: 846, Ignorance , Wealth