குருவிரொட்டி இணைய இதழ்

அருளொடும் அன்பொடும் வாராப் – குறள்: 755


அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்
புல்லார் புரள விடல்.
– குறள்: 755

– அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள்



கலைஞர் உரை

பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு
வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

குடிகளிடத்தும் தாம் கொள்ளும் அருளோடும் தம்மிடத்து அவர் கொள்ளும் அன்போடும் பொருந்தி வராத செல்வத்தின் தேட்டத்தை; அரசர் மனத்தாலும் பொருந்தாமல் தானே நீங்க விடுக.



மு. வரதராசனார் உரை

அருளோடும் அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.



G.U. Pope’s Translation

Wealth gained by loss of love and grace,
Let man cast off from his embrace.

 – Thirukkural: 755, Way of Accumulating Wealth, Wealth