குருவிரொட்டி இணைய இதழ்

அரம்பொருத பொன்போல தேயும் – குறள்: 888


அரம்பொருத பொன்போல தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.
குறள்: 888

– அதிகாரம்: உட்பகை, பால்: பொருள்.



கலைஞர் உரை

அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும்
குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உட்பகை யுண்டான குடி; அரத்தால் அராவப்பட்ட இரும்பு போல உட்பகையால் அராவப்பட்டு வலிமை குன்றும்.



மு. வரதராசனார் உரை

உட்பகை உண்டான குடி, அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்புபோல் வலிமை குறைக்கப்பட்டுத் தேய்ந்து போகும்.



G.U. Pope’s Translation

As gold with which the file contends is worn away, So strength of house declines where hate concealed hath sway.

Thirukkural: 888, Enmity Within, Wealth.