குருவிரொட்டி இணைய இதழ்

ஐயப் படாஅது அகத்தது உணர்வானை – குறள்: 702


ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தொடு ஒப்பக் கொளல்.
– குறள்: 702

– அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

ஒருவன் மனத்தில் உள்ளதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனது மனத்தின்கண் உள்ளதனை ஒருதலையாக உணரவல்லவனை; வடிவால் மாந்தனாயினும் மதிநுட்பத்தால் தெய்வம்போன்றவனென்று கருதி,அதற்கேற்ப மதித்துப் போற்றுக.



மு. வரதராசனார் உரை

ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும்.



G.U. Pope’s Translation

Undoubting, who the minds of men scan,
As deity regard that gifted man.

 – Thirukkural: 702, The Knowledge of Indication, Wealth