குருவிரொட்டி இணைய இதழ்

ஆவிற்கு நீர்என்று இரப்பினும் – குறள்: 1066


ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல். – குறள்: 1066

– அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள்



கலைஞர் உரை

தாகம் கொண்டு தவிக்கும் ஒரு பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக்கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வேட்கை தணிக்கத் தண்ணீரின்றி இறக்கும் நிலைமையிலுள்ள ஓர் ஆவினுக்காக, ஒருவன் தண்ணீர் தருகவென்று அறம் நோக்கி யிரந்து கேட்கும் போதும்; அவன் நாவிற்கு அவ்விரவைப்போல இழிவு தருவது வேறொன்றுமில்லை.



மு. வரதராசனார் உரை

பசுவிற்கு நீர்வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும் அந்த இரத்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.



G.U. Pope’s Translation

E’en if a draught of water for a cow you ask,
Nought’s so distaseful to the tongue as beggar’s task.

 – Thirukkural: 1066, The Dread of Mendicancy, Wealth