குருவிரொட்டி இணைய இதழ்

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே – குறள்: 716


ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு.
– குறள்: 716

– அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும்
உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பரந்த நூற்பொருள்களை உள்ளத்திற் கொண்டு அவற்றின் உண்மையை உணரும் உயர்ந்த அறிஞரவையில் வல்லானொருவன் வழுப்படல்; வீடு பேற்றின் பொருட்டுத் துறவுநெறிக்கண் நெடிது ஒழுகினவன் அந்நெறியினின்றும் தவறி வீழ்ந்தை யொக்கும்.



மு. வரதராசனார் உரை

விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலை தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.



G.U. Pope’s Translation

As in the way one tottering falls, is slip before The men whose minds are filled with varied lore.

 – Thirukkural: 716, The Knowledge of the Council Chamber, Wealth