குருவிரொட்டி இணைய இதழ்

ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு – குறள்: 25


ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி. – குறள்: 25

– அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம்



கலைஞர் உரை

புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஐம்புலனையும் அடக்கின முனிவனது வலிமைக்கு; அகன்ற வானத்துள்ள தேவர்க்கரசனாகிய வேந்தனே (இந்திரனே) போதிய சான்றாளனாம்.



மு. வரதராசனார் உரை

ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.



G.U. Pope’s Translation

Their might who have destroyed ‘the five,’ shall soothly tell
Indra, the lord of those in heaven’s wide realms that dwell.

 – Thirukkural: 25, The Greatness of Ascetics, Virtues