குருவிரொட்டி இணைய இதழ்

தமிழ் எழுத்துகளின் வகைகள் – இலக்கணம் அறிவோம்

தமிழ் எழுத்துகளின் வகைகள்

எழுத்து என்பது வரி வடிவத்தால் எழுதப்படுவதும், ஒலி வடிவத்தால் எழுப்பப்படுவதும் (உச்சரிக்கப்படுவதும்) ஆகும்.

தமிழ் எழுத்துகள் இரண்டு வகைப்படும். அவை, முதல் எழுத்துகள் மற்றும் சார்பெழுத்துகள் ஆகும். மேலும், முதல் எழுத்துகள் இரண்டு வகைகளாகவும், சார்பெழுத்துகள் பத்து வகைகளாகவும் உள்ளன.

  1. முதல் எழுத்துகள் – முதன்மையானவை (மொத்தம் 30 எழுத்துகள்)
    1. உயிர் எழுத்துகள் (அ முதல் ஔ வரையிலான 12 எழுத்துகள்)
    2. மெய்யெழுத்துகள் (க் முதல் ன் வரையிலான 18 எழுத்துகள்)
  2. சார்பு எழுத்துகள் – முதல் எழுத்துகளைச் சார்ந்து வருபவை
    1. உயிர்மெய் (க முதல் ன வரையிலான 216 எழுத்துகள்)
    2. ஆய்தம் (ஃ எனும் 1 ஆய்த எழுத்து)
    3. உயிரளபெடை
    4. ஒற்றளபெடை
    5. குற்றியலிகரம்
    6. குற்றியலுகரம்
    7. ஐகாரக்குறுக்கம்
    8. ஔகாரக்குறுக்கம்
    9. மகரக்குறுக்கம்
    10. ஆய்தக்குறுக்கம்