குருவிரொட்டி இணைய இதழ்

வடைகறி – செய்முறை – மகளிர் பகுதி

வடைகறி – செய்முறை – மகளிர் பகுதி – சமையல் பகுதி

தேவையான பொருட்கள்

  1. கடலைப்பருப்பு = 150 கிராம்
  2. தக்காளி = 3 
  3. பச்சை மிளகாய் = 3 
  4. வெங்காயம் = 2 
  5. தேங்காய் துண்டு = 4
  6. கசகசா = இரண்டு மேசைக்கரண்டி 
  7. மிளகாய்த்தூள் = 25 கிராம்
  8. தனியாத்தூள் = இரண்டு மேசைக்கரண்டி
  9. சோம்பு = 2 மேசைக்கரண்டி 
  10. கறி மசாலா பட்டை = சிறிது 
  11. பிரிஞ்சி இலை = ஒன்று 
  12. ஏலக்காய் = 2
  13. பூண்டு = 4 பற்கள்
  14. மஞ்சள் தூள் = சிறிதளவு
  15. சமையல் எண்ணெய் = 100 மி.லி 
  16. கறிவேப்பிலை = சிறிதளவு
  17. உப்பு = தேவைக்கேற்ப

செய்முறை

  1. கடலைப்பருப்பை ஒரு மணி நேரம்  ஊறவைக்கவும்.
  2. பூண்டை உரித்து வைக்கவும்.
  3. பின் தேங்காய் கசகசா இவற்றை மை போல மென்மையாக அரைத்து வைக்கவும்.
  4. ஊறவைத்த கடலைப்பருப்பை மை போல அரைக்காமல் வடைக்கு அரைப்பது போல் அரைத்து எடுக்கவும்.
  5. பின் அரைத்த மாவில் உப்பு சிறிது போட்டு இட்லி பாத்திரத்தில் ஆவியில் வைத்து அரைப் பதமாக வேக வைத்துக்கொள்ளவும்.
  6. பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு, கறி மசாலா பட்டை, பிரிஞ்சி இலை இவற்றை போட்டு வதக்கவும். அடுப்பை மெதுவாக எரிய விடவும்.
  7. பின் பச்சை மிளகாய்,  வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றுடன் கறிவேப்பிலையையும் போட்டு நன்றாக வதக்கவும்.
  8. சிறிது தண்ணீர் ஊற்றி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் இவற்றைப் போட்டு கிளறி நன்றாக கொதிக்கவிடவும்.
  9. அரைத்த தேங்காய் விழுதுடன் ஏலக்காயைப் பொடி செய்து அதில் போடவும்.
  10. இட்லி பாத்திரத்தில் வேக வைத்தவற்றைப் பிசைந்து, கொதிக்கும் குழம்பில் போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி, குழம்பில் சிறிது உப்பு போடவும். நன்றாக கொதித்தவுடன் உப்பு சரி பார்த்து இறக்கவும்.

வடைகறி இட்லியுடன் சேர்த்து உண்ண மிகவும் நன்றாக இருக்கும்.