குருவிரொட்டி இணைய இதழ்

உருளைக்கிழங்கு குருமா – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

உருளைக்கிழங்கு குருமா – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

தேவையான பொருட்கள்

செய்முறை

  1.  முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக அரிந்து எடுத்துக் கொள்ளவும்.
  2. தக்காளி, வெங்காயம் இவற்றையும் அரிந்து எடுத்துக் கொள்ளவும்; பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.
  3. பின் அடுப்பைப் பற்ற வைத்து, பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் பட்டை, பிரியாணி இலை, சோம்பு  மற்றும் புதினா ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். பின், அதனுடன் தக்காளி, வெங்காயம் பூண்டு இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  4. அதனுடன் அரிந்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  5. பின் மஞ்சள்தூளையும் குழம்பு மிளகாய்த்தூளையும் சேர்க்கவும். கிழங்கில் சேர்வதற்காக சிறிது உப்பையும் போட்டு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கிளற வேண்டும்.
  6. அடுப்பை மெதுவாக எரிய விடவும். பின் தேங்காயைத் துருவி, அதனுடன் தனியாவையும் சேர்த்து, சிறிது எண்ணெய் ஊற்றி வறுக்கவும். வறுத்த தேங்காய், தனியாவுடன், இஞ்சி, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  7. கசகசாவைத் தனியாகச் சிறிய ஜாரில் போட்டு நன்றாக மை போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  8. பின் அரைத்த மசாலாவையும், தனியாக  அரைத்த  கசகசாவையும் சேர்த்து அதில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கலக்கி விடவும்.
  9. பின் அதை நன்றாக கொதிக்கவிடவும்.  குழம்பிற்கு தகுந்தவாறு உப்பு போடவும்.

இது சாதத்திற்கு சுவையாக இருக்கும்.