குருவிரொட்டி இணைய இதழ்

பூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

பூண்டு-வெந்தயக் குழம்பு – செய்முறை – சமையல் பகுதி

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. முதலில் பூண்டைத் தோலுரித்து வைக்கவும்.
  2. தேங்காய்த் துண்டை சிறிய துண்டுகளாக  அரிந்து கொள்ளவும்.
  3. பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும். அடுப்பை மெதுவாக எரிய விடவும்.
  4. எண்ணெய் காய்ந்தவுடன் அரைத்துவைத்த தேங்காய், பச்சை மிளகாய் இவற்றை லேசாக கீறி அதையும் சேர்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  5. தக்காளி, வெங்காயம் இவற்றை அரிந்து வைக்கவும்.
  6. வறுத்து வைத்த தேங்காய், பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து வைக்கவும்.
  7. புளியை சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
  8. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் அரிந்து வைத்த வெங்காயத்தையும், பூண்டையும் அதில் போட்டு நன்றாக வதக்கவும்.
  9. அதனுடன் தக்காளியையும் போட்டுக் கிளறவும். அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.
  10. பின் அதில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் இவற்றைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கிளறிவிடவும். குழம்பு அதிக தண்ணீர் இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் நல்லது.
  11. ஊற வைத்த புளியைக் கரைத்து ஊற்றவும். உப்பு போட்டு நன்றாக கரண்டியால் கலக்கிவிடவும்.
  12. குழம்பு கொதிக்கும் போது, அரைத்த தேங்காய் விழுதை அதில் போட்டு கொதிக்கவிடவும்.
  13. பெருங்காயத் தூளைப் போட்டு இறக்கி வைக்கவும்.

இப்போது மணம் மற்றும் சுவை மிகுந்த பூண்டு-வெந்தயக் குழம்பு தயார்.