குருவிரொட்டி இணைய இதழ்

மூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் – மகளிர் பகுதி

மூக்குக்கடலைக் கறி – செய்முறை – சமையல் பகுதி

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. முதலில் மூக்கு கடலையை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  2. தக்காளி, வெங்காயம் இவற்றை பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். ஊறவைத்த மூக்குக் கடலையை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். 
  3. பின் வேகவத்த கடலையில் இருந்து கொஞ்சம் தனியாக எடுத்து மிக்ஸியில் போட்டு மென்மையாக இல்லாமல் சற்று அரைப்பதமாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  4. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
  5. எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை இவற்றைப் போட்டு கிளறிவிடவும்.
  6. தக்காளி, வெங்காயம் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.
  7. நன்றாக வதங்கியவுடன் தனியாத் தூள், மிளகாய்த் தூள் இவற்றைப் போட்டு கிளறி விட்டு, வேக வைத்த கடலையைப் போட்டு கிளறி விட்டு, சிறிது தண்ணீர் ஊற்றவும்.
  8. தேவைக்கு ஏற்ப உப்பையும் போட்டு குழம்பை கொதிக்க விடவும்.
  9. குழம்பு கொதித்து வரும்போது அரைத்த மூக்கு கடலையைப் போட்டு கொதிக்கவிட்டு, உப்பு சரிபார்த்து இறக்கி வைக்கவும்.

இப்போது சுவையான மூக்குக்கடலைக் கறி தயார். இது சப்பாத்தி, ஆப்பம், இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து உண்ண உகந்ததாக இருக்கும்.