குருவிரொட்டி இணைய இதழ்

கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு (கத்திரிக்காய் புளிக்கறி) – சமையல் குறிப்பு – Recipe


கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு (கத்திரிக்காய் புளிக்கறி) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி – Recipe

தேவையான பொருட்கள்



செய்முறை

  1. கத்திரிக்காயை அரிந்து தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
  2. பின் தேங்காய், வெங்காயம், மிளகாய் மற்றும் சீரகத்தை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகைப் போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலையையும், கத்திரிக்காயையும் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். காய் வெந்தவுடன் உப்பை போட்டு கிளறவும்.
  4. பின்பு அரைத்து வைத்த தேங்காய் விழுதை அதில் போட்டு கிளறவும். அதனுடன் மஞ்சள் தூளையும் போடவும்.
  5. புளியைக் கரைத்து  அதில் ஊற்றிவிடவும். குழம்பு கொதித்தவுடன் தேவைப்படின், சிறிது உப்பைக் குழம்பில் போட்டு கிளறிவிட்டு இறக்கிவைக்கவும்.

இப்போது மணம் மிக்க கத்திரிக்காய்-தேங்காய் குழம்பு தயார். இதற்கு தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கத்திரிக்காய் புளிக்கறி என்று பெயர். இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். மிகவும் எளிமையான மற்றும் அருமையான குழம்பு.

குறிப்பு: கத்திரிக்காய்க்கு பதில், வாழைக்காய் அல்லது முருங்கைக்காய் பயன்படுத்தியும் வாழைக்காய் புளிக்கறி அல்லது முருங்கைக்காய் புளிக்கறி சமைக்கலாம். ஆனால், ஒரு வித்தியாசம். வதக்குவதற்கு முன், வாழைக்காய் அல்லது முருங்கைக்காயை, முதலில் சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ள வேண்டும்.