குருவிரொட்டி இணைய இதழ்

GATE – 2020 – பொறியியலில் பட்டதாரித் திறனறித் தேர்வு – கேட் – 2020 (Graduate Aptitude Test in Engineering)

கேட் – 2020 – பொறியியலில் பட்டதாரித் திறனறித் தேர்வு – (GATE – 2020 – Graduate Aptitude Test in Engineering)

2020-ஆம் ஆண்டிற்கான கேட் தேர்வு (பொறியியலில் பட்டதாரித் திறனறித் தேர்வு – GATE – 2020 – Graduate Aptitude Test in Engineering) பற்றிய விவரங்களை இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகம், டெல்லி (IIT, Delhi) வெளியிட்டுள்ளது. பொறியியல் / தொழில் நுட்பம் / அறிவியலுக்கான இந்த கணினி வழித் திறனறித் தேர்வை, இந்த முறை ஐ.ஐ.டி. டெல்லி நடத்த இருக்கிறது.

இந்தியாவின் சிறந்த பொறியியல் / தொழில்நுட்ப / அறிவியல் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து முதுநிலைப் பட்டப் படிப்பு (Masters in Engineering / Technology or Science) / ஆராய்ச்சிப் படிப்பு (PhD) படிக்க விரும்பும் பட்டதாரிகள் அல்லது கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இந்த தகுதித் தேர்வை எழுதலாம். இந்த திறனறித் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு மேற்படிப்பு பயிலும் போது மாதம்தோறும் கல்வி உதவித் தொகை (Scholarship) வழங்கப்படுகிறது.

பல அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவங்களில் சேர்ந்து மேற்படிப்பு பயிலவும் இந்த தகுதித் தேர்வு பயன்படுகிறது.

மேலும் இந்தியாவின் சில பொதுத் துறை நிறுவங்களில் பணிபுரிய இந்த தேர்வு தகுதித் தேர்வாகக் கருதப்படுகிறது.

விண்ணப்பங்களை 03-செப்டெம்பெர்-2019 முதல் இணைய வழியில் பதிவு செய்யலாம்.

கல்வித் தகுதி

இளநிலைப் பொறியியல் (B.E) / தொழில்நுட்பம் (B.Tech) / கட்டடக்கலை (B.Arch) / மருந்தாளுமை (B.Pharm) அல்லது முதுநிலை அறிவியல் (M.Sc) / கணினிப் பயன்பாடுகள் (M.C.A) – பட்டம் பெற்றோர் மற்றும் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள்.

விண்ணப்பிக்க இறுதி நாள்

விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய இறுதி நாள் 24-செப்டெம்பர்-2019. கூடுதல் கட்டணத்துடன் நீட்டிக்கப்பட்ட இறுதித் தேதி 01-அக்டோபர்-2019.

மேலும் கல்வித்தகுதி பற்றிய கூடுதல் விவரங்கள், தேர்வுப் பாடங்கள், பாடப்பகுதிகள், முக்கிய தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, தகவல் கையேடு, மற்றும் தேர்வு பற்றிய விவரங்களை அறிய ஐ.ஐ.டி. டெல்லியின் கேட் (GATE – 2020) அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் (கீழே கொடுக்கப்பட்டுள்ளது):

கேட் – 2020 அதிகாரப்பூர்வ இணையதளம் – Official Website of GATE – 2020 (http://gate.iitd.ac.in/)