குருவிரொட்டி இணைய இதழ்

தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள் (BVSc & AH – BTech Admissions 2019)

B.V.Sc மற்றும் B.Tech சேர்க்கைகள் – 2019 – இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (​​BVSc & AH) மற்றும் பி.டெக் (B.Tech) கோழியின / உணவு / பால்வளத் தொழில் நுட்பம் (BVSc & AH – BTech Admissions 2019)

உங்களுக்குக் கால்நடை மருத்துவர் ஆகும் விருப்பம் உள்ளதா? நீங்கள் +2 (HSC / CBSE) படிப்பை முடித்தவரா? தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், 2019-ன் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (​​BVSc & AH) மற்றும் பி.டெக் (B.Tech) கோழியின / உணவு / பால்வளத் தொழில் நுட்பம், போன்ற பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கான (BVSc & AH – BTech Admissions 2019) விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Tamilnadu Veterinary and Animal Sciences University) உறுப்புக் கல்லூரிகளும் அவற்றில் உள்ள இளநிலைப் பட்டப்படிப்புகளும்:

மேலேயுள்ள பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய இறுதி நாள் 10-ஜூன்-2019.

மேலும், கல்வித்தகுதி, தேர்ந்தெடுக்கும் முறை, விண்ணப்பங்களை பதிவு செய்யும் முறை, சென்ற ஆண்டின் குறைந்த பட்ச மதிப்பெண்கள் (Last Year’s Minimum Cut-Off Marks) போன்ற விவரங்களுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைய முகவரியைப் பார்க்கவும்: