குருவிரொட்டி இணைய இதழ்

கடல் உலகம் (Sea World) – உலகம் முழுவதும் ஒரே மூச்சில் – One Breath Around the World


கடல் உலகம் (Sea World) – உலகம் முழுவதும் ஒரே மூச்சில் – One Breath Around the World

நீருக்கு அடியில் இருக்கும் உலகத்தைக் காண வேண்டுமா? இதோ கடல் உலகைக் (Sea World) காண தன்னுடன் நம்மை அழைத்துச் செல்கிறார் கில்லாம் நேரி (Guillaume Néry)!அவர், தன்னுடன் ஒரு ஆக்சிஜன் உருளை கூட இல்லாமல் தன் மூச்சைப் பிடித்துகொண்டு பல்வேறு நாடுகளில் இருக்கும் கடல் பகுதிகளின் அடிமட்டத்திற்குச் சென்று நம்மை அசர வைக்கிறார்.

இந்த அழகிய கடல் உலகக் காட்சியைப் கில்லாமைப் போலவே அவருடன் மூச்சைப் பிடித்துக்கொண்டு நீந்தி சென்று படம் பிடித்து இருப்பவர் அவரது மனைவி ஜூலி காட்டியெர் (Julie Gautier). இந்தக் குறும்படத்தின் பெயர் உலகம் முழுவதும் ஒரே மூச்சில்… (One Breath Around the World). இது ஃபிரான்ஸ், ஃபின்லாந்து, மெக்சிகோ, ஜப்பான், ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த குறும்படத்தை நேஷனல் ஜியாகிரஃபிக் வெளியிட்டுள்ள கீழ்க்கண்ட காணொளியைச் சொடுக்கிக் காணலாம்!