குருவிரொட்டி இணைய இதழ்

விழுப்புண் படாதநாள் எல்லாம் – குறள்: 776


விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.
– குறள்: 776

– அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள்



கலைஞர் உரை

ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த
நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கடந்துபோன தன் வாழ்நாட்களையெல்லாம் எடுத்தெண்ணி; அவற்றுள், போரிற் சிறந்த புண்படாத நாட்களையெல்லாம் வீணாகக் கழித்த நாட்களோடு சேர்ப்பான் தூய பொருநன்.



மு. வரதராசனார் உரை

வீரன் கழிந்த தன் நாட்களைக் கணக்கிட்டு விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன்படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.



G.U. Pope’s Translation

The heroes, counting up their days, set down as vain; Each day when they no glorious wound sustain.

 – Thirukkural: 776, Military Spirit, Wealth